உள்ளூர் செய்திகள்

அரசு போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

Published On 2023-06-14 08:26 GMT   |   Update On 2023-06-14 08:26 GMT
  • விருதுநகரில் அரசு போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
  • நல்ல முறையில் பயிற்சி பெற்று வெற்றியடைய வேண்டும் என்றார்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட நூலக அலுவலக கூட்ட ரங்கில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஒருங்கி ணைந்த ஒன்றிய அரசுப் பணிக்கான போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடந்தது. இதனை கலெக்டர் ஜெயசீலன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில், இந்த பயிற்சி வகுப்பானது, விருதுநகர் மாவட்ட நூலக அலுவலத்திலும், சிவகாசி அரசு கலை அறிவியல் கல்லூரியிலும் நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் சுமார் 170 போட்டித்தேர்வு ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இவர்களை எளிய முறையில் போட்டி தேர்வை எப்படி அனுகுவது, விடா முயற்சி, போட்டி தேர்வில் வெற்றி பெறுவதற்கான நுணுக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளையும், போட்டி தேர்வு குறித்து அவரது அனுபகங்களுடன் கூடிய ஊக்க உரைகளை வழங்கினர். எனவே தமிழக அரசு வழங்கும் இந்த திட்டத்தினை பயன்படுத்தி, நல்ல முறையில் பயிற்சி பெற்று வெற்றியடைய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் ஞானபிரபா, பிரியதர்சினி (தொழில்நெறி வழிகாட்டி), மாவட்ட நூலக அலுவலர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News