உள்ளூர் செய்திகள்

கோவிலில் புனரமைப்பு பணியில் ரூ.12 லட்சம் மோசடி

Published On 2023-10-03 07:44 GMT   |   Update On 2023-10-03 07:44 GMT
  • கோவிலில் புனரமைப்பு பணியில் ஒப்பந்ததாரர் ரூ.12 லட்சம் மோசடி செய்துள்ளார்.
  • ஸ்ரீவில்லிபுத்தூர் மேஜிஸ்திரேட் கோர்ட்டில் பெருமாள் வழக்கு தொடுத்தார்.

விருதுநகர்

வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது52). அங்குள்ள ஒரு சமுகாத்தினருக்கு சொந்தமான கோவிலில் நிர்வாகியாக உள்ளார். அதே ஊரை சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் சுப்பையா. கோவிலில் புனரமைப்பு பணிகளை ரூ.79 லட்சத்து 40 ஆயிரத்து 375 மதிப் பீட்டில் மேற்கொள்ள ஒப்பந்தம் செய்து அந்த தொகை கோவில் நிர்வா கத்தின் சார்பில் சுப்பையா விடம் கொடுக்கப்பட்டது.

முழுவதுமாக பணிகள் முடிவடையாத நிலையில் நிர்வாகத்திடம் கூடுதலாக சுப்பையா பணம் கேட்டார். அப்போது ஏற்கனவே கொடுத்த பணத்திற்கு வரவு-செலவு கணக்கு களை ஒப்படைக்குமாறு நிர்வாகத்தின் தரப்பில் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் கணக்கு கொடுக்கவில்லை. இதை தொடர்ந்து தாசில்தார் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

அப்போதும் செலவு கணக்கு கொடுக்க சுப்பையா மறுத்துவிட்டார். இதையடுத்து கோவில் பணிகளில் சுப்பையா ரூ.12 லட்சம் அளவுக்கு மோசடி செய்துள்ளதாகவும்,அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் ஸ்ரீவில்லிபுத்தூர் மேஜிஸ்திரேட் கோர்ட்டில் பெருமாள் வழக்கு தொடுத்தார்.

கோர்ட்டு உத்தர வின்பேரில் ஒப்பந்ததாரர் சுப்பையா, மற்றொரு சுப்பையா, ராமராஜ், ஜெயக்குமார், சரவணன், சிற்பி சீனிவாசன் ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News