உள்ளூர் செய்திகள்

முதியவரிடம் ரூ.11 லட்சம் மோசடி

Published On 2023-10-30 08:35 GMT   |   Update On 2023-10-30 08:35 GMT
  • அதிக வட்டி தருவதாக ஏமாற்றி முதியவரிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்துள்ளனர்.
  • அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள வெள்ளக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் கதிரவன் (வயது58). அதே பகுதியை சேர்ந்தவர்கள் வாழவந்தான் (35), அவரது மனைவி பவித்ரா (25), உறவினர் திருப்பதி (22).

இவர்கள் மூவரும் தாங்கள் நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும், முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாகவும் கதிரவனிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். ஆனால் கதிரவன் விருப்ப மின்றி இருந்துள்ளார்.

பழக்கத்தின் அடிப்ப டையில் பலமுறை வற்பு றுத்தியதால் 5 தவணைகளில் ரூ.11 1/2 லட்சத்தை அந்த நிதி நிறுவனத்தில் கதிரவன் முதலீடு செய்தார்.3 மாதங்களுக்கு மட்டுமே வட்டி கிடைத்தது. அதன்பின்னர் வட்டி வரவில்லை.

இதையடுத்து சந்தேக மடைந்த கதிரவன் அந்த நிறுவனம் குறித்து விசா ரித்தார். அதில் குறிப்பிட்ட முகவரியில் நிறுவனம் செயல்படவில்லை என தெரியவந்தது. இதையடுத்து பணத்தை திருப்பி தருமாறு வாழவந்தானிடம் கதிரவன் வலியுறுத்தினார்.

அப்போது பணத்தை திரும்ப கொடுக்க முடியாது என்றும், மீறி கேட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அருப்புக்கோட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கதிரவன் வழக்கு தொடர்ந்தார்.

கோர்ட்டு உத்தரவின் பேரில் வாழவந்தான் உள்பட 3 பேர் மீது அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News