உள்ளூர் செய்திகள்

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிதி உதவி

Published On 2022-11-17 06:40 GMT   |   Update On 2022-11-17 07:09 GMT
  • அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.16 கோடி நிதி உதவி அளிப்பதாக தொழிலாளர் உதவி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.
  • கடந்த மாத இறுதிவரை 9,151 பேருக்கு ரூ.3 கோடியே 9 லட்சத்து 58 ஆயிரத்து 390 நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்த கண்காணிப்பு குழு கூ ட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 11 மாதங்களில் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் 21,739 நபர்கள் புதிதாக உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளனர். 15,629 பேரின் பதிவு புதுப்பிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியம் 455 நபர்களுக்கும், கல்வி உதவித்தொகை 27,253 நபர்களுக்கும், இயற்கை மரண நிதி உதவி 579 நபர்களுக்கும் மற்றும் இதர நலத்திட்ட உதவிகள் சேர்த்து மொத்தம் 31,890 நபர்களுக்கு ரூ.16 கோடியே 40 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் உறுப்பினராக உள்ள சொந்த வீடு இல்லாத கட்டுமான தொழிலாளயர்களுக்கு தாமாக சொந்தமாக வீடு கட்ட அல்லது அரசின் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு பெற ரூ.4 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

6 கட்டுமான தொழிலாளர்களுக்கு நிதி உதவி அளிக்க சென்னை தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தால் இறுதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் முதன்மையாக நடைபெறும் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலில் ஈடுபட்டுள்ள இ.எஸ்.ஐ. மற்றும் சேமநலநிதி பிடித்தம் செய்யப்படாத அமைப்பு சாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பிற்கு தமிழக அரசால் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை உத்தரவின் பேரில் தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர் நல வாரியம் கடந்த 2021-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. கடந்த மாத இறுதிவரை 9,151 பேருக்கு ரூ.3 கோடியே 9 லட்சத்து 58 ஆயிரத்து 390 நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் காளிதாஸ் தெரிவித்தார்.

Tags:    

Similar News