கூட்டத்தில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ., வருவாய் அலுவலர் ஜானகி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
- நில உரிமையாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
- நில உரிமையாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் புதிய பஸ் நிலையம் முதல் தென்காசி ரோட்டிற்கு இணைப்புச் சாலை திட்டப்பணியில் நில எடுப்பு பணிக்காக அரசு நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
அந்த பணியில் நில உரிமையாளர்களுடன் இறுதி கலந்தாய்வு கூட்டம் ராஜபாளையம் தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது.
தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின் தனி மாவட்ட வருவாய் அலுவலர் ஜானகி தலைமை தாங்கினார். தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நில உரிமையாளர்கள் அனைவரும் தங்களது வங்கி கணக்கை ஒப்படைத்தனர்.
அவர்கள் அனைவருக்கும் அவரவர் வங்கி கணக்கில் ஜூன் மாத இறுதியில் பணம் வரவு வைக்கப்படும், மேலும் நெடுஞ்சாலைத் துறை சார்பாக அடுத்த மாதம் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு ஒப்பந்தம் விடப்பட்டு சாலை அமைக்கும் விரைவில் பணி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
சிறப்பு வாய்ந்த இந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய நில உரிமை யாளர்கள் அனைவருக்கும், ராஜபாளையம் தொகுதி பொதுமக்கள் சார்பாகவும் சட்டமன்ற உறுப்பினரான தனது சார்பாகவும் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இந்த கூட்டத்தில் தாசில்தார் ராமச்சந்திரன், நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளர் ராமகிருஷ்ணன், நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்ட ராஜா, நில உரிமையாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.