உள்ளூர் செய்திகள்

ரூ.3.22 கோடியில் குடியிருப்பு வளாகம் கட்டும் பணி

Published On 2022-08-31 08:25 GMT   |   Update On 2022-08-31 08:25 GMT
  • இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ரூ.3.22 கோடியில் குடியிருப்பு வளாகம் கட்டும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
  • பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தனர்.

சாத்தூர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ரூ.3.22 கோடி மதிப்பீட்டில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு குடியிருப்பு வளாகம் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

இதில் சாத்தூர் ஒன்றிய சேர்மன் நிர்மலா கடற்கரை ராஜ், சாத்தூர் ஒன்றிய செயலாளர் முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டு குத்து விளக்கேற்றினர். இருக்கன்குடி பஞ்சாயத்து தலைவர் செந்தாமரை, கோவில் நிர்வாக அலுவலர் கருணாகரன், பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் அறங்காவலர் குழு பூசாரிகள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு கோவில் வளாகத்தில் உபயதாரர் நிதி ரூ.43.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட உள்துறை அலுவலகம், பாதுகாப்பு அறை மற்றும் வாகன மண்டபம் ஆகியவற்றை சேர்மன் மற்றும் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தனர்.

Tags:    

Similar News