உள்ளூர் செய்திகள்

விருதுநகரில் குழந்தைகள் தினத்தையொட்டி நடந்த விழிப்புணர்வு நடை பேரணியை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.

விருதுநகரில் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி

Published On 2023-11-15 07:10 GMT   |   Update On 2023-11-15 07:10 GMT
  • விருதுநகரில் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.
  • பாகுபாடு, ஜாதி வேற்றுமை, குழந்தை கடத்தல் உள்ளிட்டவை தொடர்பாக 1098 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

விருதுநகர்

விருதுநகரில் குழந்தைகள் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் ஜெயசீலன் ெதாடங்கி வைத்தார்.

பேரணியில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குழந்தைகளையும் 18 வயது வரை கல்வி கற்பதை உறுதி செய்தல், குழந்தைகளுக்கான உரிமைகளை உறுதி செய்தல், அனைத்து தளங்களிலும் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு எதிரான உடல் மற்றும் மன அள விலான வன்முறை, குழந்தை தொழிலாளர், குழந்தை திருமணம், பெண் சிசு கொலை, பாலின பாகுபாடு, ஜாதி வேற்றுமை, குழந்தை கடத்தல் உள்ளிட்டவை தொடர்பாக 1098 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளித்தல் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப் பட்டது.

இந்த பேரணி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி வரை சென்று நிறைவடைந்தது. பேரணியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீனாட்சி, போலீஸ் துணை சூப்பிரண்டு பவித்ரா, குழந்தைகள் நலக்குழு தலைவர் கெங்கா, இளைஞர் நீதிக்குழும உறுப்பினர் சதீஸ்குமார், துணை தொழிலாளர் ஆய்வாளர் சதாசிவம், மனித வர்த்தகம் மற்றும் ஆள்கடத்தல் தடுப்புப்பிரிவு ஆய்வாளர் பானுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News