உள்ளூர் செய்திகள்

ராஜபாளையம் சேக்கிழார் மன்ற அறக்கட்டளையின் சார்பில் சொற்பொழிவுக் கூட்டத்தில் இலவச சீருடை வழங்கப்பட்டது.

சேக்கிழார் மன்ற சொற்பொழிவு

Update: 2022-06-28 09:37 GMT
  • ராஜபாளையம் சேக்கிழார் மன்ற அறக்கட்டளையின் சார்பில் சொற்பொழிவுக் கூட்டம் மறக்கண்ணுச் செட்டியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
  • மன்றத்தலைவர் பூமிநாதன் தலைமை தாங்கினார்.

ராஜபாளையம்

ராஜபாளையம் சேக்கிழார் மன்ற அறக்கட்டளையின் சார்பில் சொற்பொழிவுக் கூட்டம் மறக்கண்ணுச் செட்டியார் திருமண மண்டபத்தில் நடந்தது. மன்றத்தலைவர் பூமிநாதன் தலைமை தாங்கினார். செயலாளர் கல்யாணவெங்கட்ராமன் வரவேற்றார். சுதா, தீபா ஆகியோர் தேவார பண்ணிசை பாடல் பாடினர்.

நெல்லை சிவ காந்தி "திருமுறைத்தமிழ்" என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். கூட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட சிவனடியார் திருக்கூட்டத் தலைவர் சிவசங்கர் வாழ்த்துரை வழங்கினார். ஏழை-எளிய மாணவர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டன. சிவனடியார்கள், இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

மன்றத்தின் துணைத்தலைவர் சங்கரலிங்கம் நன்றி கூறினார். கூட்ட ஏற்பாடுகளை இணைச்செயலர்கள் முத்தையா, கணேசன் உட்பட மன்ற உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News