உள்ளூர் செய்திகள்

தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சியை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தொடங்கி வைத்து பார்வையிட்டார். அருகில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணிகணேஷ், அரசு கல்லூரி முதல்வர் கண்ணன், ஊரக வளர்ச்சி உதவி திட்ட அலுவலர் விசாலாட்சி உள்ளனர். 

தொழில் வழிகாட்டும் கண்காட்சி-கருத்தரங்கு

Published On 2023-01-20 15:07 IST   |   Update On 2023-01-20 15:07:00 IST
  • சிவகங்கையில் தொழில் வழிகாட்டும் கண்காட்சி-கருத்தரங்கை கலெக்டர் தொடங்கி வைத்தார்
  • சுய தொழில் தொடங்கி பயன்பெறலாம்.

சிவகங்கை,

சிவகங்கை அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடந்தது. இதை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் தொழில் நெறி கண்காட்சி அமைக்கப்பட்டு பல்வேறுத் துறைகளைச் சார்ந்த

முதன்மை அலுவ லர்களைக் கொண்டு கருத்தரங்கமும் நடைபெற்று வருகிறது. இதில் பங்கு பெற்றுள்ள மாணவ-மாணவிகள் கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் எதிர்காலத்தில் தங்களது வாழ்க்கை பயணத்தை சிறப்பாக மேற்கொள்வதற்கு அடித்தளமாகவும், உதவிகரமாகவும் அமையும்.

அறிவாற்றலைப் பொ றுத்தே எதிர்காலத்தில் நீங்கள் நல்ல வேலைவாய்ப்பை பெறமுடியும். குறிப்பாக அறிவுத்திறனை வெளிப்படுத்துவதற்கு ஏதுவாக பேச்சாற்றால் திறமையை வளர்ப்பது முக்கியமாகும். கல்வி த்தகுதியின் அடிப்படையில் எளிதாகப் பெறும் வேலைவாய்ப்புக்களை தேர்ந்தெடுத்து அதைப் பெறு வதற்கான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும். தேர்ந்தெடுக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் துறைகள் குறித்து அதனைப் பற்றிய தெளிவான புரிதல் முதலில் இருக்க வேண்டும்.

மேலும் அரசின் வேலைவாய்ப்புக்களை பெறுவதற்கு ஏதுவாக TNPSC, IBPS போன்ற போட்டித்தேர்வுகளை எதிர்கொள்வதற்கு ஏதுவாக தங்களை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் போட்டித் தேர்வுகளில் பங்கு பெற விருப்பம் உள்ளவர்க ளுக்கென அதற்கான பயிற்சி வகுப்புக்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்திலும், மாவட்ட மைய

நூலகத்திலும், சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு அருகிலுள்ள சிவகங்கை படிப்பு வட்ட மையத்திலும் அதற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனையும் சிவகங்கையை சேர்ந்த மாணவ-மாணவிகள் பயன்படுத்திக் கொண்டு பயன்பெறலாம்.

இந்த கருத்தரங்கில் மாவட்ட தொழில் மையத்தின் சார்பிலும் இளைய தலைமுறையினர்கள் தொழில் பயன்பெறு வதற்கு ஏதுவாக செயல்ப டுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்துள்ளனர்.இதனைக் கருத்தில் கொண்டும், ஆர்வத்தின் அடிப்படையிலும் சுய தொழில் தொடங்கி பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News