உள்ளூர் செய்திகள்

வணிகவியல் கருத்தரங்கு

Published On 2023-02-19 07:59 GMT   |   Update On 2023-02-19 07:59 GMT
  • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வணிகவியல் கருத்தரங்கு நடந்தது.
  • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி பேராசிரியர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

சிவகாசி

சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் வணிகவியல் (கணினி பயன்பாட்டியல்) துறை சார்பில் வணிகத்தில் சமீபத்திய கணினி தொழில்நுட்ப பயன்பாடு என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஸ்ரீ செளடாம்பிகா பொறியியல் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை தலைவர் முத்துக்குமார் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் இரண்டாமாண்டு மாணவி பத்மகலா அனைவரையும் வரவேறறார். முதல்வர் பாலமுருகன் பேசுகையில் மாணவர்களின் போட்டியிடும் திறனை வளப்படுத்த இத்தகைய கருத்தரங்குகள் அவசியம் என்றார்.

சிறப்பு விருந்தினர் முத்துக்குமார் பேசுகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பல்வேறு பயன்பாடுகளை சுட்டிக்காட்டினார். மேலும் நிலையான வளர்ச்சிக்கு கணினி சார்ந்த தொழில்நுட்பத்தின் தற்போதைய கண்டுபிடிப்புகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். நிறைவாக, இரண்டாமாண்டு மாணவி அபிலட்சுமி நன்றி கூறினார். துறை தலைவர் நளாயினி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவிப் பேராசிரியர் கிருஷ்ணன் செய்திருந்தார். இந்தக் கருத்தரங்கில் வணிகவியல் (கணினி பயன்பாட்டியல்) துறையைச் சேர்ந்த 238 மாணவிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News