உள்ளூர் செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் மின் இணைப்பு பெற லஞ்சம்?

Published On 2023-05-15 07:22 GMT   |   Update On 2023-05-15 07:22 GMT
  • விருதுநகர் மாவட்டத்தில் மின் இணைப்பு பெற லஞ்சம் கேட்பதாக புகார்கள் எழுந்தது.
  • இணைய தளம் மூலமாக பணம் செலுத்தி மின் இணைப்பு பெறலாம் என அறிவித்தது.

விருதுநகர்

தமிழகத்தில் புதிதாக வீடு மற்றும் வணிக வளாகம் கட்டுவோர் மின் இணைப்பு பெற லஞ்சம் கேட்பதாக புகார்கள் எழுந்தது. இதனை தவிர்க்க மின் இணைப்பு களை பெறவும், அதற்கான கட்டணத்தை செலுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்தது.

அதன்படி புதிதாக மின் இணைப்பு பெற விரும்பு வோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து இணைய தளம் மூலமாக பணம் செலுத்தி மின் இணைப்பு பெறலாம் என அறிவித்தது. இந்த நடவடிக்கை காரணமாக ெபருமளவு முறைகேடுகள் தவிர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக மின் இணைப்பு பெறுவோர் லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

அரசு அறிவித்தப்படி ஆன்லைன் மூலம் மின் இணைப்பு பெற விண்ணப்பம் செய்தாலும் இடைத்தரகர்கள் மற்றும் சிலர் மூலம் குறிப்பிட்ட பணம் செலுத்தினால் மட்டுமே உடனடியாக மின் இணைப்பு வழங்கப்படுவ தாகவும், இல்லை என்றால் பல்வேறு குறைகளை கூறி காலம் தாழ்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து பாதிக்கப் பட்ட ஒருவர் கூறுகையில், வீட்டு மின் இணை ப்புக்காக ஆன்லைன் மூலம் விண்ணப் பித்தேன்.

ஆனால் தற்போது வரை மின் இணைப்பு கொடுக்கவில்லை. அரசு நிர்ண யித்த கட்டணத்தை விட இடைத்தரகர்களுக்கு பணம் கொடுத்தால் மின் இணைப்பு உடனடியாக தரப்படும் என கூறுகிறார் கள் என வேதனையுடன் தெரிவித்தார்.

Tags:    

Similar News