தூய்மை நகரத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
- தூய்மை நகரத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் நகராட்சி, வைமா இளம்படை மாணவர்கள் மற்றும் கேசா டி மிர் இணைந்து தூய்மை நகரத்தி ற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி தொடங்கி வைத்தார்.
வைமா வித்யாலயா பள்ளி முதல்வர் கற்பகலட்சுமி தலைமை தாங்கினார். வைமா இளம்படை இணை ஒருங்கிணைப்பாளர் ராமராதா வரவேற்றார். ஜே.சி.ஐ. ராஜபாளையம் கேசா டி மிர் தலைவர் தேவி நிகழ்ச்சியை அறிமுகம் செய்தார். இளம்படை ஒருங்கிணைப்பாளர் ராஜலட்சுமி, இளம்படை மாணவர்களை அறிமுகம் செய்தார். இளம்படை மாணவர்கள் ''எனது குப்பை எனது பொறுப்பு'' என்ற தலைப்பில் பாடல் பாடினர். 4-ம் வகுப்பு மாணவர் ஆதேஷ் ''மக்கும் குப்பை மக்காத குப்பை'' என்ற தலைப்பில் பேசினார். குப்பையை தரம் பிரித்தல் பற்றி வைமா இளம்படை மாணவர்கள் பொதுமக்களுக்கு செய்முறை விளக்கம் அளித்தனர். வைமா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் திருப்பதிசெல்வன், மேனேஜிங் டிரஸ்டி அருணா திருப்பதி செல்வன் வழிகாட்டுதலின்படி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.