உள்ளூர் செய்திகள்
ராஜபாளையம் ராணுவ வீரர் குடும்பத்திற்கு விருது
- இந்தியா-பாகிஸ்தான் போரில் வீர மரணமடைந்த ராஜபாளையம் ராணுவ வீரர் குடும்பத்திற்கு விருது வழங்கப்பட்டது.
- விருது வழங்கி கவுரவித்தனர்.
ராஜபாளையம்
கடந்த 1965-ம் ஆண்டு நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரில் ராஜபாளையத்தை சேர்ந்த ராணுவ வீரர் நாராயணராஜா வீரமரணமடைந்தார்.
இந்த நிலையில் அவரது தியாகத்தை கவுரவிக்கும் வகையில் நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவனந்தபுரத்தை சார்ந்த ராணுவ முகாமில் இருந்து சுபேதார் சிவசுப்பிரமணியன், ஓய்வு பெற்ற மேஜர் திருப்பதி ராஜா ஆகியோர் இந்திய ராணுவம் சார்பில் ராஜபாளையத்திற்கு நேரில் வந்து நாராயணராஜா குடும்பத்தினருக்கு வீர விருது வழங்கி கவுரவித்தனர்.
ஏற்கனவே கடந்த மாதம் இந்திய அரசு சார்பில் ராஜபாளையத்தில் உள்ள 5-வது என்.சி.சி சைகை அணி சார்பில் விருது வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.