ஜன்னல் கதவை உடைத்து திருட முயற்சி
- ஜன்னல் கதவை உடைத்து திருட முயற்சித்த சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் வி.பி.நந்தவனம் தெருவை சேர்ந்தவர் பழனிவேல்(64). இவரது பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் வெளியூரில் உள்ளனர். இந்த நிலையில் இரவு 9 மணியளவில் பக்கத்து வீட்டில் சத்தம் கேட்டுள்ளது. தனது வீட்டின் மாடியில் இருந்து பழனிவேல் அங்கு பார்த்துள்ளார். அப்போது அந்த வீட்டின் மாடியில் இருந்து 3 மர்ம நபர்கள் கீழே குதித்து ஓடி உள்ளனர். திடீரென அவர்களின் 2 பேர் பழனிவேல் வீட்டின் ஜன்னல் கதவையும் உடைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் பழனிவேல் சத்தம் போட்டதால் அவர்கள் தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து விருதுநகர் பஜார் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதன்பேரில் விருதுநகர் அல்லம்பட்டி அனுமன் நகரை சேர்ந்த லோகநாதன் (21), 114 காலனியை சேர்ந்த ஒரு சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ரஞ்சித் குமாரை தேடி வருகின்றனர்.