- ஜோதிடர்-வாலிபர் தற்கொலை செய்து கொண்டனர்.
- காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
திருச்சுழி காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்தவர் பூமிநாதன்(37), ஜோதிடர். இவருக்கு மது பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. வெளியூர் செல்வதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. உறவி னர்கள் தேடிப்பார்த்தபோது பந்தல்குடி ரேசன் கடை அருகே விஷம் குடித்து இறந்து கிடந்தார். இதுகுறித்து பந்தல்குடி போலீஸ் நிலையத்தில் அவரது மனைவி தாமரை கனி புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரியாபட்டி அருகே பள்ளத்துப்பட்டி நேதாஜி நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(28). இவரது மனைவி முத்து செல்வி. இவர்களுக்கு திருமணமாகி 2 வருடமாகி றது. 9 மாத ஆண் குழந்தை உள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவையொருவர் தள்ளி விட்டதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த முத்துசெல்வி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கணவர் அங்கு சென்று பார்த்தபோது போலீசில் புகார் செய்ய உள்ளதாக மனைவி கூறி உள்ளார். இதனால் மனமுடைந்த பாலசுப்பிரமணியன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.