உள்ளூர் செய்திகள்
- அருப்புக்கோட்டையில் வேளாண் கருத்தரங்கம் நடந்தது.
- ஏராளமான விவசாயிகள் பங்கேற்று பயன்பெற்றனர்.
பாலையம்பட்டி
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தேசிய தோட்டக்கலை வாரியத்தின் மானிய திட்டங்கள் பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது.
தேசிய தோட்டக்கலை வாரிய துணை இயக்குனர் ராஜா மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு மானிய திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.
இதில் அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்று பயன்பெற்றனர்.
கருத்தரங்கில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாச்சியாரம்மாள், துணை இயக்குனர் வேளாண்மை (மத்திய அரசு திட்டம்) சுமதி, தோட்டக்கலை துணை இயக்குனர் ராதாகிருஷ்ணன், வேளாண்மை அறிவியல் நிலையம் பேராசிரியர் ராஜா பாபு, செல்வி ரமேஷ், தொழில் வல்லுநர் ராகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.