உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. மாநாட்டில் பங்கேற்று சென்ற பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம்

Published On 2023-08-21 12:35 IST   |   Update On 2023-08-21 12:35:00 IST
  • அ.தி.மு.க. மாநாட்டில் பங்கேற்று சென்ற பெண்கள் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.
  • சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள புல்லகவுண்டன் பட்டியை சேர்ந்தவர் காளியப்பன். அதிமுக கிளை செயலாளரான இவரது ஏற்பாட்டில் நேற்று மதுரையில் நடந்த மாநாட்டிற்கு வேனில் கட்சியினர் சென்றனர். இரவு மாநாடு முடித்து விட்டு அவர்கள் ஊருக்கு புறப்பட்டனர்.

விருதுநகர் அருகே சூலக்கரை சாத்தூர் ரோட்டில் மருளுத்து பகுதியில் சென்ற போது அங்குள்ள பாலத்தின் தடுப்பு சுவரில் ஒரு கார் மோதி விபத்துக்குள்ளாகி இருந்தது. இதை கவனிக்காத வேன் டிரைவர் கார் மீது பயங்கரமாக மோதினார்.

இதில் வேனில் இருந்த புல்லகவுண்டன்பட்டியை சேர்ந்த துளசியம்மாள் (75), ராஜம்மாள்(75), சுப்புலட்சுமி (57), சாரதா(37), கவிதா (37), ஜெயமணி (67), சீனிவாசன் (60), தாயம்மாள் (72), துரைராஜ் (72), சிபியோன் ராஜ் (18) ஆகிய 10 பேர் படுகாயமடைந்தனர்.

இவர்கள் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கி டையில் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளான காரில் இருந்த 2 பேரையும் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இது குறித்து விசாரித்த போது பணி ஓய்வு பெற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உள்பட 2 பேர் விபத்தில் சிக்கி காய மடைந்திருப்பது தெரிய வந்தது.

இந்த விபத்து தொடர்பாக சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News