உள்ளூர் செய்திகள்

40-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்கும் கபடி போட்டி

Published On 2023-05-20 08:17 GMT   |   Update On 2023-05-20 08:17 GMT
  • ராஜபாளையத்தில் 40-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்கும் கபடி போட்டி இன்று மாலை தொடங்குகிறது.
  • நகர்மன்ற தலைவர் பவித்ரா சியாம் தலைமை தாங்குகிறார்.

ராஜபாளையம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ராம்கோ தொழில் நிறுவனங்களின் நிறுவனர் பி.ஏ.சி.ராமசாமி ராஜா நினைவு விளையாட்டு மன்றம் சார்பில் 60-வது மணிவிழா ஆண்டு கபடி போட்டிகள் இன்று (20-ந் தேதி) மாலை முதல் தொடங்குகிறது.

ராஜபாளையம் ஊர்க்காவல் படை மைதானத்தில் மாலை 4 மணியளவில் கபடி போட்டிகள் தொடங்குகின்றன.

நகர் மன்ற தலைவர் பவித்ரா சியாம் தலைமை தாங்குகிறார். ராஜுக்கள் கல்லூரி செயலாளர் சிங்கராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டு கபடி போட்டிகளை தொடங்கி வைக்கின்றனர்.

கே.எஸ்.ஆர். பஸ் சர்வீஸ் அதிபர் பிரகாஷ் சங்கர், அர்ஜுனா விருது பெற்ற வீரர் கணேசன், கலால்துறை கண்காணிப்பாளர் கனிமுத்து குமரன், மதுரை வல்லத்தரசு ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.

இதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட கபடி தலைவர் சுப்பிரமணிய ராஜா, செயலாளர் கனிமுத்து குமரன், துணைத் தலைவர் சம்சுதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

இந்த போட்டிகளை காவல்துறை அணி உள்பட 40-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன.

Tags:    

Similar News