உள்ளூர் செய்திகள்
பெண்ணை தாக்கிய கணவர் மீது வழக்கு
- பெண்ணை தாக்கிய கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர்
சாத்தூர் படந்தால் பகுதியை சேர்ந்தவர் சத்தியா (வயது 27).இவரது கணவர் காளிராஜ் (30). இவர்கள் கடந்த 2016-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் நடத்தையில் சந்தேகப்பட்டு சத்தியாவை கணவர் துன்புறுத்தி வந்தார். இதுகுறித்து சத்தியா பலமுறை போலீசில் புகார் செய்துள்ளார். இந்த நிலையில் உறவினர்கள் சமாதானப்படுத்தி சேர்த்துவைத்துள்ளனர். இந்த நிலையில் கணவர் மீண்டும் தகராறு செய்ததால் சத்தியா தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அங்கு வந்த காளிராஜ், சத்தியாவை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சாத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் சத்தியா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.