உள்ளூர் செய்திகள்

கப்பலூர் சுங்கச் சாவடியை அகற்றாவிட்டால் முற்றுகை போராட்டம்

Published On 2023-05-25 09:56 GMT   |   Update On 2023-05-25 09:56 GMT
  • கப்பலூர் சுங்கச் சாவடியை அகற்றாவிட்டால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.
  • மத்தியதரை வழி போக்குவரத்து மந்திரி நிதின்கட்காரியை சந்தித்து வலியுறுத்தினர்.

விருதுநகர்

மதுரை-விருதுநகர் இடையே கப்பலூரில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி விதிமுறை களுக்கு முரணாக திரு மங்கலம் நகராட்சி பகுதியில் அமைக்க ப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நான்கு வழிச்சாலையில் பயணிக்காத வாகனங்க ளிடமும் சுங்க கட்டணம் வசூலிக்கும் நிலையில் இதனை அகற்ற வேண்டு மென மாணிக்கம் தாகூர் எம்.பி., தென்காசி தொகுதி எம்.பி. தனுஷ்குமார் ஆகியோர் தலைமையில் சுங்கச்சாவடி மீட்புக் குழு தலைவர் ஜெயராமன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் மத்தியதரை வழி போக்குவரத்து மந்திரி நிதின்கட்காரியை சந்தித்து வலியுறுத்தினர்.அப்போது அவர் விரைவில் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என்றும் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். ஆனாலும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாத நிலை நீடிக்கிறது.

கப்பலூர் சுங்கச்சா வடியில் அடிக்கடி வாகன ஓட்டிகளுடன் அங்குள்ள ஊழியர்கள் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்துவதுடன் வாகன ஓட்டிகளை தாக்குவதும் அதிகரித்து வரும் நிலை உள்ளது.

இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரி வித்துள்ளனர். இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சியி னர் போராட்டம் நடத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கப்ப டாத நிலை நீடிக்கிறது.

இதுகுறித்து கப்பலூர் சுங்கச்சாவடி மீட்பு குழு தலைவர் ஜெயராமன் மற்றும் விருதுநகா் நாடாளுமன்ற தொகுதி முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் கூறியதாவது:- மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமையில் மத்திய மந்திரி நிதின்கட்காரி யை சந்தித்து கப்பலூர் சுங்கச்சாவடி பிரச்சினை களை குறித்து தெரிவித்த போது அவர் அதனை அகற்ற நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளித்தார். மேலும் 60 கி. மீ. இடைவெளியில் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என்றும் விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். ஆனால் எவ்வித ந டவ டிக்கையும் எடுக்கவில்லை. இதேநிலை நீடித்தால் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி காங்கி ரஸ் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News