உள்ளூர் செய்திகள்

போழக்குடி கிராமத்தில் தீவிர சுகாதார பணிகள் நடைபெற்றது.

சிறுமிக்கு வைரஸ் காய்ச்சல்-சுகாதார பணிகள் தீவிரம்

Published On 2023-06-20 10:13 GMT   |   Update On 2023-06-20 10:13 GMT
  • போழக்குடி கிராமத்தில் உள்ள ஒரு சிறுமிக்கு திடீரென வைரஸ் காய்ச்சல் வந்தது.
  • வீடு மற்றும் தெருவில் சென்று நோய் தடுப்பு மருந்து மற்றும் சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.

கும்பகோணம்:

திருப்பனந்தாள் ஒன்றியம் கோவில்ராமபுரம் ஊராட்சியில் போழக்குடி கிராமத்தில் உள்ள ஒரு சிறுமிக்கு திடீரென வைரஸ் காய்ச்சல் வந்தது.

இதைத் தொடர்ந்து சிறுமிக்கு உண்ணி காய்ச்சல் வைரஸ் பரவியது என்று மருத்துவர்கள் பரிசோதனையில் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து கோணுழாம்பள்ளம் ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி அருள் ஆகியோர்கள் குழந்தையின் நலன் கருதியும் வீடு மற்றும் தெருவில் சென்று நோய் தடுப்பு மருந்து மற்றும் சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.

மேலும் சுகாதார பணியாளர்கள் வீடுகள் தோறும் கணக்கெடுப்பு செய்து தடுப்பூசி மற்றும் சத்து மாத்திரைகளை வினியோகித்து வருகின்றனர்.

இது குறித்து மருத்துவ அதிகாரி அபினேஷ் கூறியதாவது:-

கிராமத்தில் வயல்வெளி பகுதிகள் செடி, கொடிகள் மண்டி கிடப்பதால் அதில் உள்ள சிறிய பூச்சிகள் மூலம் உண்ணி காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளது.

எனவே மருத்துவ பரிசோதனையில் பாதிக்கப்பட்டவர்க்கு முன்பே அறிந்ததால் உரிய சிகிச்சை அளித்து வருகிறோம்.

மேலும் கிராமங்களிலும், பரவாமல் தடுப்பு பணிகளை சுகதார பணியாளர்கள் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். உண்ணி காய்ச்சலுக்கு மக்கள் பீதி அடைய தேவை இல்லை என தெரிவித்தார்.

Tags:    

Similar News