உள்ளூர் செய்திகள்

விநாயகர் சிலைகளை ஆற்றங்கரையில் கரைப்பதற்காக வாகனங்களில் பொதுமக்கள் ஊர்வலமாக கொண்டு சென்ற காட்சி.

விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம்

Published On 2023-09-23 10:20 GMT   |   Update On 2023-09-23 10:20 GMT
  • தேன்கனிக்கோட்டையில் 500 போலீசார் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் நடைபெற்றது.
  • 2 டிரோன் கேமராக்கள் மூலமும் ஊர்வலப் பாதை கண்காணிக்கப்பட்டது.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் சார்பில் நகரில் பல்வேறு இடங்களில் 50 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இந்த சிலைகளை கரைப்ப தற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

ராம ஆஞ்சினேயர் கோவில் முன்பு தொடங்கிய ஊர்வ லம் மேளதாளத்துடன் நகரின் முக்கிய சாலை களான ராஜாஜி சாலை, பஸ் நிலையம், காந்தி சாலை, நேதாஜி சாலை, நேரு சாலை, கோட்டைவாசல் தர்கா வழியாக பட்டா ளம்மன் கோவில் ஏரியை சென்ற டைந்தது. பின்னர் கிரேன் மூலம் அனைத்து விநாயகர் சிலைகளையும் ஏரியில் விஜர்சனம் செய்யப்பட்டது . முன்னதாக, ஊர்வலத்தையொட்டி இந்து முன்னனி சார்பில் பழைய பஸ் நிலையத்தில் பொது கூட்டம் நடை பெற்றது.

இதில் சேலம் கோட்ட தலைவர் சந்தோஷ்குமார் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார். இதில் இந்து முன்னனி கோட்ட அமைப்பாளர் உமேஷ் மாவட்ட பா.ஜ.க தலைவர் நாகராஜ் இந்து முன்னணி நிர்வாகிகள் கார்த்திக் அரிஷ் ரகு உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர் .

ஊர்வலத்தை ஒட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் தேன் கனிகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, காவல் ஆய்வாளர்கள் நாகராஜ் , சுப்பிரமணி ஆகியோர் தலைமையில் 500 போலி சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கண்காணிப்பு கேமராக்கள், 2 டிரோன் கேமராக்கள் மூலமும் ஊர்வலப் பாதை கண்காணிக்கப்பட்டது.

Similar News