உள்ளூர் செய்திகள்

சூதாட்டத்தில் ஈடுபட்டு போலீசாரால் கைது செய்யப்பட்ட 6 பேர்.

விழுப்புரம் போலீசார் அதிரடி பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது:பணம் பறிமுதல்

Published On 2023-02-03 09:44 GMT   |   Update On 2023-02-03 09:44 GMT
  • அங்கு பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
  • 6 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த ரூ.1,367 மற்றும் 5 செல்போன்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்..

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் நடந்து வரும் குற்றச் செயல்க ளை கட்டுப்படுத்த விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி விழுப்புரம் பகுதியில் பணம் வைத்து சூதாட்ட ங்கள் நடப்பதாக போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிற்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து உதவி சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.  ப்போது விழுப்புரம் தாலுக்கா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சிந்தாமணி கிராமம் மாந்தோப்பு அருகே சூதாடுவதாக போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்த விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் சத்யானந்தம், புனித வள்ளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

இதில் அங்கு பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சிந்தாமணி கிராமம் மெயின் ரோட்டை சேர்ந்த பாஸ்கரன் மகன் மதன் (வயது 23), அதே ஊரைச் சேர்ந்த கனகராஜ் மகன் அருண் (27), குமார் மகன் விக்னேஷ் (26), ராஜேந்திரன் மகன் ராமச்சந்திரன் (30), அய்யனார் மகன் வடிவேல் (29), கிருஷ்ணமூர்த்தி மகன் சங்கர் (47) என்பது தெரியவந்தது.   இதையடுத்து 6 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த ரூ.1,367 மற்றும் 5 செல்போன்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்.

Tags:    

Similar News