உள்ளூர் செய்திகள்

திண்டிவனம் அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்ற கிராம மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபோது எடுத்த படம்.

தண்ணீர் டேங்க்கை சரி செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட முயன்ற கிராம மக்கள்

Published On 2023-05-07 08:03 GMT   |   Update On 2023-05-07 08:03 GMT
  • நடுவனந்தல் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திண்டிவனம் சாலைக்கு இன்று காலையில் வந்தனர்.
  • நீர்த் தேக்கத் தொட்டி கட்டப் பட்டு 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நடு வனந்தல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 40 ஆண்டு களுக்கு முன்பு கட்டப்பட்ட குடிநீர் டேங்க் பழுதாகி விட்டது. இதனால் பொது மக்களுக்கு விநியோகிக் கப்படும் குடிநீரில் புழுக்கள் வந்தது. இதனால் குடிநீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக பொது மக்கள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் ஆத்திரமடைந்த நடுவனந்தல் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திண்டிவனம் சாலைக்கு இன்று காலையில் வந்தனர். அப்போது அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்த ரோசனை இன்ஸ்பெக்டர் அன்னக் கொடி தலைமையான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு சாலை மறியல் ஈடுபட முயன்ற பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணப் படும் என உறுதியளித்தனர். இதனை அடுத்து பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து மறியலில் ஈடுபட முயன்ற பொது மக்கள் கூறுகையில், நீர்த் தேக்கத் தொட்டி கட்டப் பட்டு 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது. இது பாழடைந்து, டேங்கின் மேல் தளம் உடைந்து பறவைகளின் எச்சம் மற்றும் குப்பைகள் விழுகின்றன. மேலும், இந்த டேங்கில் புழுக்களும் இருக்கிறது. இந்த குடிநீர் குழாய் மூலம் எங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இதனை குடிப்பதால் நோய் தொற்று ஏற்படுகிறது. இது குறித்து அமைச்சர், தொகுதி எம்.எல்.ஏ., அரசு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு விரைந்து தீர்வு கிடைக்கவில்லை எனில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்கள்.

Tags:    

Similar News