உள்ளூர் செய்திகள்

சின்ன சேலம் அருகே 12 ஆண்டுகளாக உள்ள 144 தடை உத்தரவை நீக்க கிராம மக்கள் கோட்டாட்சியரிடம் மனு

Published On 2023-02-24 09:49 GMT   |   Update On 2023-02-24 09:49 GMT
  • பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், பட்டியல் இன மக்களும் இடையே தகராறு ஏற்பட்டது.
  • தற்போது நடைமுறையில் உள்ள 144 தடை உத்தரவை நீக்கி தரும்படி கோரிக்கை வைத்தனர்

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பாண்டியன்குப்பம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானதாக உள்ள சோலையம்மன் கோவிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக கடந்த 2012 ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், பட்டியல் இன மக்களும் இடையே தகராறு ஏற்பட்டது.பட்டியலின மக்கள் சோலையம்மன் கோவிலில் வழிபாடு செய்ய கூடாது என பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் கூறினர். இதைய டுத்து நாங்களும் சாமி கும்பிடு வோம் என பட்டியல் இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடினர். இதனால் பாண்டியன்குப்பம் கிராமத்தில் இருவேறு சமூகத்தினர் இடையே தகராறு ஏற்பட்டது.ஜாதி கலவரம் ஏற்படா மல் இருப்பதற்காக விழுப்புரம் மாவட்ட ஆட்சி நிர்வாகமும், காவல் துறையும், வருவாய்த் துறையும் பிரச்சனைக்குரிய பாண்டியன்குப்பம் கிரா மத்தில் 144 தடை உத்தரவை பிரப்பித்தனர். கடந்த 2012- ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு தற்போது வரை நீடிக்கிறது.

இந்த நிலையில், பாண்டி யன்குப்பம் கிராமத்தில் பொதுமக்கள் ஒன்று கூட தடையும், கிராம சபை கூட்டம் நடத்த தடை, அரசு நலத்திட்ட உதவிகள் அளிக்கும் நிகழ்ச்சிக்கு தடை உள்ளிட்ட பல்வேறு தடைகளை பாண்டியன் குப்பம் கிராம மக்கள் சந்தித்து வருகிறார்கள். தங்கள் கிராமத்தில் ஏற்பட்டுள்ள சூழலை கருத்தில் கொண்டு மன வேதனையில் உள்ளனர். இதனை யொட்டி தற்போது பாண்டியன்குப்பம் கிராமத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இன சமூகத்தினர் தங்கள் கிராமத்தில் ஏற்பட்டுள்ள 144 தடை உத்தரவை நீக்க முடி வெடுத்தனர்பிரச்சனைகளை ஏற்படுத்தி வந்த இரு வேறு சமூகத்தி னரும் தங்களுக்குள் சமாதானம் அடைந்து கடந்த 2 தினங்க ளுக்கு முன்னர் பிப்ரவரி 22-ஆம் தேதி கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகம் சென்று கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் செல்வி பவித்ரா, சின்னசேலம் வட்டாட்சியர் இந்திரா, மற்றும் வருவாய்த்துறை யினருடன் பேசி பாண்டி யன்குப்பம் கிராமத்தில் இருதரப்பு சமூக மக்களும் இனி பிரச்சினைகள் இன்றி சமத்துவமாக, சகோதரத்துவமாக தங்கள் கிராமத்தில் உள்ள சோலை யம்மன் கோவிலில் தேர் திருவிழாவை நடத்திக் கொள்கி றோம் என ஒப்புதல் அளித்து, பாண்டியன் குப்பம் கிராமத்தில் தற்போது நடைமுறையில் உள்ள 144 தடை உத்தரவை நீக்கி தரும்படி கோரிக்கை வைத்தனர்.பாண்டியன்குப்பம் கிரா மத்தில் கடந்த 12 ஆண்டு களாக பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இன சமூக மக்கள் சோலையம்மன் கோவில் பிரச்சினை காரணமாக வேறு பட்டு கிடந்த நிலையில் தற்போது ஊர் நலனுக்காக தங்களுக்குள் சமரசத்தை ஏற்படுத்திக் கொண்டு 144 தடை உத்தரவை நீக்க கோரி அதிகாரிகளிடம் முறையிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News