உள்ளூர் செய்திகள்

பாலகொலா ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

Published On 2023-03-16 10:07 GMT   |   Update On 2023-03-16 10:07 GMT
  • மகளிர் திட்ட குழுவிற்கு சிறப்பு கிராமசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • முடிவில் மகளிர் திட்ட பாலகொலா வட்டார ஓருங்கிணைப்பானர் நித்யா நன்றி கூறினார்.

    ஊட்டி,

நீலகிரியில் மகளிர் திட்டத்தின் பொறு ப்பாளர்களை உறுப்பினர்களாக கொண்டு, பாலகொலா ஊராட்சியின் 2023-2024ம் ஆண்டுக்கான கிராம அளவிலான முன்னேற்றத்திட்டங்கள் குறித்த விரிவான கணெக்கெடுப்பு நடத்திட முடிவுச்செய்ய ப்பட்டுள்ளது.

இதற்காக அடுத்து வரவுள்ள பாலகொலா ஊராட்சியின் கிராமசபை கூட்டத்தில் ஒப்புதல் பெற்று நடைமுறைப்ப டுத்திட வேண்டி, 5 பேர் கொண்ட சிறப்பு குழு அமைப்பதற்கான சிறப்பு கிராமசபை கூட்டம் பாலகொலா ஊராட்சியில் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு பாலகொலா ஊராட்சி தலைவர் கலையரசி முத்து தலைமை தாங்கினார். துணை த்தலைவர் மஞ்சை மோகன் முன்னிலை வகித்தார். சிறப்பு அலுவலர்களாக ஊட்டி ஊராட்சி கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் சிந்துஜா, வனத்துறை அலுவலர் சரவணன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இக்கூட்டத்தில் வளர்ச்சி பணிக்கான கணக்கெடுப்பு பணியாளர்களாக மகளிர் திட்டத்தை சேர்ந்த மாரியம்மா தலைமையில், சிவரஞ்சனி, கிருஷ்ணவேணி, நவமணி, ரன்ஜினி ஆகி யோரைக்கொண்ட மகளிர் திட்ட குழுவிற்கு சிறப்பு கிராமசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இக் குழுவினர் அனைத்து கிராமங்க ளுக்கும் சென்று அந்தந்த கிராமத்திற்கு தேவையான வளர்ச்சித்திட்டங்களின் தேவைகள் குறித்து கணக்கெடுத்து, கிராமசபைகளில் ஒப்புதல் பெற்று நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்று முடிவு ச்செய்யப்பட்டது. பாலகொலா ஊராட்சி செயலாளர் கார்த்திக், வரவேற்றார். மகளிர் திட்ட பாலகொலா வட்டார ஓருங்கிணைப்பானர் நித்யா நன்றி கூறினார்.

Tags:    

Similar News