உள்ளூர் செய்திகள்
கடலரிப்பு தடுப்பு பணிகளை ஆய்வு செய்த விஜய் வசந்த்
- ரூபாய் 20 லட்சம் ஒதுக்கப்பட்டு கடலரிப்பு தடுப்பு பணிகள் தொடங்கி நடைபெறுகிறது.
- குளச்சல் நகர காங்கிரஸ் தலைவர் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் ஆய்வில் பங்கேற்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டில்பாடு கடற்கரை கிராமத்தில் கடலரிப்பு ஏற்பட்டு ஊருக்குள் கடல் நீர் புகுந்து வீடுகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டது.
கடல் நீர் வீடுகளுக்குள் புகுவதை தடுக்க போர்க்கால அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி அவசரகால நிதியில் இருந்து ரூபாய் 20 லட்சம் ஒதுக்கப்பட்டு கடலரிப்பு தடுப்பு பணிகள் துவங்கியது. அந்த பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சென்று பணிகளை ஆய்வு செய்தார்.
பங்குத் தந்தை ராஜு, குளச்சல் நகர காங்கிரஸ் தலைவர் சந்திரசேகர், தமிழக காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் லாரன்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.