உள்ளூர் செய்திகள்
எம்.பி. நிதியில் மீனவர் ஓய்வறை, வலை பின்னும் இடம்- அடிக்கல் நாட்டினார் விஜய் வசந்த்
- பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- குருந்தன்கோடு வட்டார துணைத் தலைவர் எனல் ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் வாணியக்குடியில் மீனவர் ஓய்வறை மற்றும் மீனவர்கள் வலை பின்னும் இடம் கட்டுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் தொகுதி எம்.பி. விஜய் வசந்த் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.
பங்குத்தந்தை சகாய ஆனந்த், குருந்தன்கோடு வட்டார துணைத் தலைவர் எனல் ராஜ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.