உள்ளூர் செய்திகள்
வர்த்தக நிறுவனங்களை ஒழுங்குபடுத்த மத்திய அரசிடம் விஜய் வசந்த் கோரிக்கை
- விரைவு வர்த்தக நிறுவனங்களை ஒழுங்குபடுத்த வேண்டும்.
- சிறு கடைகள் மற்றும் சில்லறை வியாபார நிறுவனங்கள் பாதிப்பை தடுக்க வேண்டும்.
கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி மத்திய அரசிடம் கோரிக்கை ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
நாட்டில் பெருகி வரும் விரைவு வர்த்தகம் காரணமாக சிறு கடைகள் மற்றும் சில்லறை வியாபார நிறுவனங்கள் பாதிப்பு அடைவதை சுட்டிக்காட்டி அதனை நிவர்த்தி செய்ய விரைவு வர்த்தக நிறுவனங்களை ஒழுங்குபடுத்த வேண்டும். இதனை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.