உள்ளூர் செய்திகள்

தம்பதி சென்ற மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதும் வீடியோ காட்சிகள் வெளியாகின

Published On 2023-06-26 09:39 GMT   |   Update On 2023-06-26 09:39 GMT
  • கடந்த 15 ஆணடுகளாக இங்கு சென்டர் மீடியேட்டர் இல்லாமல் ஒரு வழிப்பாதை இருக்கிறது.
  • கீழே விழும் தம்பதி மீது லாரி ஏறி இறங்கும் காட்சியும் பதிவாகி உள்ளது.

நீலாம்பூர், ஜூன்.26-

திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள புளியங்காட்டை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது66). இவரது மனைவி பாக்கி யலட்சுமி(60).

இவர்களுக்கு கவுதம் (31) என்ற மகன் உள்ளார். இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

தற்போது உறவினர் ஒருவர் வீட்டில் நடக்க உள்ள நிகழ்ச்சியில் பங்கே ற்பதற்காக கவுதம் சிலதின ங்களுக்கு முன்பு புளியங்கா ட்டிற்கு வந்தார்.

நேற்று சிங்காநல்லூரில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க ஜெகநாதன், அவரது மனைவி பாக்கியலட்சுமி ஒரு மோட்டார் சைக்கிளி லும், கவுதம், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மற்றொரு மோட்டார் சைக்கிளிலும் கோவைக்கு புறப்பட்டனர்.

இவர்கள் திருச்சி- கோவை சாலையில் சிந்தா மணிபுதூர் அருகே உள்ள கொச்சி சாலையில் வந்தனர். பின்னர் அந்த சாலையில் வலதுபுறமாக திரும்ப முயன்றனர்.

அந்த சமயம் அவ்வழியாக கேரளாவை நோக்கி வந்த லாரி ஒன்று வேகமாக வந்து ஜெகநாதனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கணவன், மனைவி 2 பேரும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தனர்.

அப்போது லாரியின் சக்கரம் அவர்கள் மீது ஏறி இறங்கியதில் தம்பதி 2 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர்.

பெற்றோர் தன் கண்முன் விபத்தில் சிக்கி இறந்ததை நேரில் பார்த்த கவுதம் கதறி அழுதார். இந்த அங்கிருந்த வர்களை கண் கலங்க செய்தது.

தகவல் அறிந்த சூலூர் போலீசார் விரைந்து வந்து ஜெகநாதன், பாக்கியலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குப்பதிவு செய்து விபத்ைத ஏற்படுத்தி யதாக லாரி டிரைவர் முகமது சாதிக்கிடம் விசா ரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையே தம்பதி மீது லாரி மோதும் சி.சி.டிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. அந்த வீடியோ காட்சியில் தம்பதி 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வலது புறமாக திரும்ப முயற்சிக்கின்றனர்.

அப்போது பின்னால் வரக்கூடிய லாரியை ஓட்டி வந்தவர் சிக்னல் கொடுக்கா மலும், ஹாரன் அடிக்கா மலும் வந்து, இவர்கள் மீது மோதும் காட்சிகளும், கீழே விழும் அவர்கள் மீது லாரி ஏறி இறங்கும் காட்சியும் உள்ளது. இது பார்ப்பவ ர்களுக்கு அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி யது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியதா வது:-

சிந்தாமணி புதூரில் உள்ள கொச்சி பைபாஸ் சாலையில் ஏராளமான விபத்துக்கள் நாள்தோறும் நடைபெற்று வருகிறது.

கடந்த 15 ஆணடுகளாக இங்கு சென்டர் மீடியேட்டர் இல்லாமல் ஒரு வழிப்பாதை இருக்கிறது. இதனால் அடிக்கடி இங்கு விபத்து க்கள் நடந்து வருகிறது.

எனவே விபத்துக்களை தடுக்கும் வகையில் இந்த பகுதியில் சென்டர் மீடியே ட்டர் வைக்க வேண்டும், போக்குவரத்து சீர் செய்யும் பணியில் போலீசாரும் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News