உள்ளூர் செய்திகள்
ஓசூர் வழியாக சேலத்துக்கு கடத்தப்பட்ட ரூ.4 லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல் -ராஜஸ்தான் மாநில வாலிபர் கைது
- ரூ.4 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது.
- ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கன்பத் (வயது 23) என்பவரை பாகலூர் போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அருகேயுள்ள சிச்சுருகானப்பள்ளி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் ரூ.4 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது.
மைசூரிலிருந்து சேலத்துக்கு அவை கடத்தி செல்லப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து ரூ.3 லட்சம் மதிப்பிலான காருடன் போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.
காரில் கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கன்பத் (வயது 23) என்பவரை பாகலூர் போலீசார் கைது செய்தனர்.