கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
- கன்றுகளுக்கு குடற்புழு நீக்க முகாம் ஆகியவை நடைபெற்றது.
- கால்நடைகளுக்கு தீவனங்கள் மற்றும் பச்சை புற்கள் வழங்கினார்.
மன்னார்குடி:
ரோட்டரி மாவட்ட அன்னபூர்ணா திட்டத்தின் கீழ் மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் தளிக்கோட்டை மற்றும் மன்னார்குடியில் கால்நடைகளுக்கு அன்னதானம் கால்நடைகளுக்கு தீவனங்கள் வழங்குதல், கன்றுகளுக்கு குடற்புழு நீக்க முகாம் ஆகியவைகள் நடை பெற்றது.
நிகழ்ச்சிக்கு மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் கோபால கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
இதில் உதவி ஆளுநர் டாக்டர் பாலகிருஷ்ணன் தீவனங்கள் மற்றும் பச்சை புற்கள்வழங்கினார். திட்ட இயக்குனர் ரமேஷ், செயலர் அன்பழகன், மண்டல செயலர் ரெங்கையன், ஹரிரவி, முன்னாள் தலைவர்கள் நடராஜன், சாந்தகுமார், தளிக்கோட்டை பால் உற்பத்தியாளர்கள் ரமணி, குமுதம். சங்க செயலர் சாரதா, சுமதி, அசோக்குமார், சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் விஜயகுமார் நன்றி கூறினார்.