உள்ளூர் செய்திகள்

கொள்ளை நடந்த வீட்டை படத்தில் காணலாம்.

சிதம்பரத்தில் துணிகரம்: வீட்டு கதவை உடைத்து 30 பவுன் நகை கொள்ளை

Published On 2022-07-12 07:06 GMT   |   Update On 2022-07-12 07:06 GMT
  • சிதம்பரத்தில் வீட்டு கதவை உடைத்து மர்ம நபர்கள் 30 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றனர்.
  • வீட்டில் இன்டர்நெட் சேவை இல்லை. எனவே சிதம்பரம் வடக்கு ரதவீதியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு மனைவியுடன் சென்றார்.

கடலூர்: 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பள்ளிப்படை வெற்றிநகரை சேர்ந்தவர் ஜாபர் அலி (வயது 56). இவர் சிங்கபூரில் வேலைபார்த்து வருகிறார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். இவரது வீட்டில் இன்டர்நெட் சேபை இல்லை. எனவே சிதம்பரம் வடக்கு ரதவீதியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு மனைவியுடன் சென்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் வீட்டு கதவையை கடப்பாரையால் உடைத்தனர். பின்னர் வீட்டுக்குள் புகுந்து பீரோவை உடைத்து அதில் இருந்த நகையை திருடிக்கொண்டு சென்றனர்.

அப்போது அந்த வழியாக சென்றவர்கள் வீட்டு கதவு திறந்துகிடப்பதை கண்டு ஜாபர் அலிக்கு தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த அவர் உடனே வீட்டுக்கு விரைந்தார். அப்போது பீரோவில் இருந்த 30 பவுன் நகை கொள்ளைபோய் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதன் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். பதறிபோன ஜாபர்அலி இதுகுறித்து சிதம்பரம் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். கொள்ளையர்கள் பற்றி துப்புதுலக்க மோப்பநாய் கடலூரில் இருந்து வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுனர்களும் கொள்ளையர்களின் ரேகையை பதிவு செய்து துப்புதுலக்கி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News