உள்ளூர் செய்திகள்
- தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபம்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் ஜாப்பேட்டை, ஜியாவுதீன் தெருவை சேர்ந்த மஸ்தான் இவருடைய மகன் இர்பான் (வயது 25) இவர் கட்டிட மேஸ்திரி.
நேற்று முன்தினம் இரவு வேலூரில் ஒரு துக்க நிகழ்ச்சிக்கு சென்று பைக்கில் பொய்கை அடுத்த மோட்டூரில் உள்ள தனியார் ஷூ கம்பெனி எதிரே வந்து கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு இர்பானை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.