உள்ளூர் செய்திகள்

வேலூரில் நேற்று இரவு பெய்த மழையில் ஆற்காடு ரோட்டில் ஊர்ந்து சென்ற வாகனங்கள். பலத்த மழையால் மக்கள் பகுதியில் வணிக வளாக கட்டிடம் இடிந்து கார் நொறுங்கிய காட்சி.

வேலூரில் இரவில் பரவலாக மழை

Published On 2022-07-17 09:06 GMT   |   Update On 2022-07-17 09:06 GMT
  • சுவர் இடிந்து கார், பைக் சேதம் ஒருவர் படுகாயம்
  • குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

வேலூர்:

வேலூரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. எனினும் மாலை வேளை களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

நேற்று பகலில் 95.5 டிகிரி வெப்பம் பதிவானது. பிற்பகலில் அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் இருந்தது.

இந்த நிலையில் மாலை 6.30 மணி அளவில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான இடங் களில் மழைநீர் தேங்கியது.

வேலூர் மக்கான் அம்பேத்கர் நகர் அருகே சாலையோரம் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சில நிறுவனங்களும், குடோன்களும் உள்ளன.

இந்த நிலையில் இரவு 9.30 மணி அளவில் திடீரென கட்டிடத்தின் மேல் தளத்தின் நடைபாதை சுவர் இடிந்து விழுந்தது. அப்போது அதன் கீழே நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் சேதமானது. இதில் அங்கிருந்த ஒருவருக்கு காலில்காயம் ஏற்பட்டது.

இதேபோல் குடியாத்தம், கே.வி.குப்பம் பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் குண்டும், குழியுமான சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். மழையின் காரணமாக இரவில் குளிர்ந்த காற்று வீசிய தால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News