உள்ளூர் செய்திகள்

கோட்டை பூங்காவில் உள்ள மின் கம்பி வேலியை ஆபத்தான முறையில் மாணவிகள் ஏறி குதித்த காட்சி.

வேலூர் கோட்டையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

Published On 2022-08-15 09:17 GMT   |   Update On 2022-08-15 09:17 GMT
  • மதில்சுவரில் ஏறிகுதித்து செல்லும் இளம்பெண்கள்
  • விடுமுறை நாட்களில் பூங்காவை திறக்க வலியுறுத்தல்

வேலூர்:

இந்திய விடுதலைப் போருக்கு வித்திட்ட சிப்பாய்ப் புரட்சி வேலூர் ேகாட்டையில் தாய் நடந்தது. இந்தக் கோட்டையில் திப்பு சுல்தான் குடும்பத்தினர், இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் ஆகியோர் சிறை வைக்கப்பட்டிருந்தனர். சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ள இந்தக் கோட்டையை ஆண்டுதோறும் பல்லாயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டுச் செல்கின்றனர்.

வேலூர் கோட்டையில் சுதந்திர தின விழாவையொட்டி கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தேசிய கொடி ஏற்றினார். கோட்டை மதில் சுவர்கள் மூவண்ண மின்விளக்கு அலங்காரங்களால் ஜொலிக்கிறது.

மேலும் கோட்டை முன்பு உள்ள காந்தி சிலை மின் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இன்று சுதந்திர தின விடுமுறை என்பதால் கோட்டைக்கு காலை முதல் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வர தொடங்கினர்.

கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில், மற்றும் கோட்டை கொத்தளம் பகுதியில் குழந்தைகளுடன் சென்று சுற்றிப் பார்த்து மகிழ்ந்தனர். மேலும் ஏராளமானோர் கோட்டை பூங்காவில் பொழுதை கழித்தனர்.

வழக்கத்தை விட கோட்டை கொத்தளம் மற்றும் பூங்கா பகுதியில் அதிக காதல் ஜோடிகள் வந்தனர். அவர்கள் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

கோட்டை அருங்காட்சியகம் இன்று விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்பட்டிருந்தது. இதனால் அருங்காட்சியகத்திற்கு குடும்பத்துடன் வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்ததால் கோட்டை வளாகம் இன்று களைகட்டியது.கோட்டையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகம் இருந்தாலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவாக இருந்தது.

வேலூர் முன்பு உள்ள கோட்டை பூங்கா கதவு மாலை திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு மூடப்படுகிறது.பகல் நேரங்களில் இந்த பூங்காவிற்கு செல்லும் கதவுகள் மூடப்படுகின்றன.

இதனால் கோட்டை பூங்காவில் கம்பிவேலியை ஏறி குதித்து உள்ளே செல்கின்றனர். தற்போது பூங்கா நுழைவுப் பகுதியில் கம்பி வேலி உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று கோட்டைக்கு வந்திருந்த மாணவ மாணவிகள் மற்றும் குடும்பத்தினர் கோட்டை பூங்காவிற்கு ஏறி குதித்து சென்றனர்.

சில மாணவிகள் ஏறி குதிக்கும் போது தவறி விழும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இது போன்ற அவல நிலையை தடுக்க விடுமுறை நாட்களில் கோட்டை பூங்காவில பொதுமக்கள் எளிதில் சென்று வரும் வகையில் பூங்கா கதவுகளை திறந்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News