உள்ளூர் செய்திகள்

கட்டுமான பணிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியண் ஆய்வு செய்த காட்சி.

இலங்கை தமிழர் குடியிருப்பு பணிகள் மார்ச் மாதத்துக்குள் முடிவடையும்

Published On 2022-09-16 15:25 IST   |   Update On 2022-09-16 15:25:00 IST
  • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தகவல்
  • 220 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது

வேலூர்:

வேலூர் அடுத்த மேல் மொணவூரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் அவர்களுக்கான குடியிருப்பு கட்டும் பணியை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டு கட்டுமான பணிக்கான கம்பிகள் சிமெண்டு கலவைகள் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் அவர்களுக்கான குடியிருப்புகள் கட்டும் பணிக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. 4 குடியிருப்புகள் வீதம், 55 தொகுப்புகளில் 220 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.

இங்கு தெருவசதி, மின்விளக்கு மற்றும் வீடுகளுக்கு இடையேயான இடைவெளி உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.

3 கட்டுமான நிறுவனங்கள் மூலம் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. கட்டுமான பணிகள் வரும் மார்ச் மாதத்திற்குள் முடிவடையும். கட்டுமான பணிகளை வாரத்திற்கு ஒரு முறை ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News