உள்ளூர் செய்திகள்

குடியாத்தம் மீனூர் வெங்கடேச பெருமாள் மூலவர் கருட அலங்காரத்தில். பிச்சனூர் வெங்கடேச பெருமாள் மூலவர் கண்ணன் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை

Published On 2022-10-08 15:12 IST   |   Update On 2022-10-08 15:12:00 IST
  • புரட்டாசி 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு நடந்தது
  • பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்

குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவில்களில் புரட்டாசி 3-வது சனிக்கிழமை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

குடியாத்தம் அடுத்த மீனூர்மலை வெங்கடேச பெருமாள் கோவிலில் புரட்டாசி 3 சனிக்கிழமை முன்னிட்டு மூலவர் வெங்கடேச பெருமாள் கருட அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

அதேபோல் பத்மாவதி தாயார் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

குடியாத்தம் பிச்சனூர் தென்திருப்பதி ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ ரங்கநாதர் ஸ்ரீ பத்மாவதி சமேத ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் 27 ஆம் ஆண்டு புரட்டாசி பெருவிழா நடைபெற்றது தொடர்ந்து மூலவர் வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மூலவர் வெங்கடேச பெருமாள் சந்தன காப்பில் கண்ணன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி யளித்தார்.

ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் அப்பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News