ரூ.1000 உரிமை தொகை பெற விடுபட்ட விண்ணப்பதாரர்கள் பதிவு செய்ய சிறப்பு முகாம்
- 2 நாட்கள் நடைபெறுகிறது
- கலெக்டர் தகவல்
வேலூர்:
தமிழக அரசால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டமானது வருகிற செப்டம்பர் 15-ந் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தில் பயன்பெற விண்ண ப்பங்கள் இணையத்தில் பதிவு செய்யும் பணி 2 கட்டங்களாக நடைபெறுகிறது.
முதல் கட்டமாக விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி கடந்த 24-ந் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 4-ந் தேதி வரை நடக்கிறது.
மாநகராட்சி பகுதியில் உள்ள 68 ரேசன் கடைகள், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 38 கடைகள், ஊராட் சிகளில் 312 கடைகள் என மொத்தம் 418 கடைகளுக்கு 397 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு முகாம் மூலம் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
ஒரே நேரத்தில் மக்கள் செல்வதால் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்க முன்கூட்டியே தெரு, நாள் மற்றும் நேரம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய டோக்கன்கள் வழங்கப்பட்டு உள்ளது.
முதல் கட்டமாக நடைபெற்று வரும் இந்த முகாமில் பதிவு செய்யாமல் விடுபட்ட மற்றும் விண்ணப்பபதிவு மேற்கொள்ளாத விண்ணப்பதாரர்கள் பதிவு செய்து கொள்ள வருகிற 3 மற்றும் 4-ந் தேதி அந்த மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி, விடுபட்ட அனைத்து குடும்ப அட்டை தாரர்களும் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.