வேலூரில் இருந்து ஆடிக்கிருத்திகை விழா சிறப்பு பஸ்கள்
- ஆடிக்கிருத்திகை திருவிழாவுக் பயணிகள் தேவைக்கு ஏற்ப இயக்கப்படும்
- தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு
வேலூர்:
ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகம் வேலூர் மண்டலத்திலிருந்து திருத்தணிக்கு 7-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை 185 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
வேலூரிலிருந்து 60 சிறப்பு பஸ்களும், ஆற்காட்டிலிருந்து 30 பஸ்களும், சோளிங்கரி லிருந்து 10 பஸ்களும், திருப்பத்தூ ரிலிருந்து 35 பஸ்களும், ஆம்பூரிலிருந்து 10 பஸ்களும், பேரணாம்பட்டில் இருந்து 10 பஸ்களும், குடியாத்தத்தில் இருந்து 30 பஸ்களும் என மொத்தம் 185 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
மேலும் 9-ந் தேதி அன்று ரத்தினகிரி, வள்ளிமலை, கைலாசகிரி, ஜலகம்பாறை, அணைக்கட்டு அருகே உள்ள முத்துக்குமரன்மலை, பாலமதி ஆகிய ஊர்களில் உள்ள முருகப்பெருமான் கோவிலில் நடைபெறும் ஆடிக்கிருத்திகை திருவிழாவுக்கும் பயணிகள் தேவைக்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
பொதுமக்கள் இந்த பஸ்சை சேவையிைனை பயன்படுத்தி கொள்ளவேண்டும்.