உள்ளூர் செய்திகள்

சத்துவாச்சாரி மாநகராட்சி 2-வது மண்டலத்தில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் குப்பை தொட்டிகளை இலவசமாக வழங்கிய காட்சி.

வேலூர் மாநகராட்சி பகுதியில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குங்கள்

Published On 2022-10-17 09:53 GMT   |   Update On 2022-10-17 09:53 GMT
  • 2-வது மண்டலத்தில் விழிப்புணர்வு
  • 300 பேருக்கு இலவசமாக குப்பைத்தொட்டிகள் வழங்கப்பட்டன

வேலூர்:

வேலூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வீடு வீடாக சென்று மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் குப்பைகளை சேகரித்து வருகின்றனர்

அதற்குப் பிறகு மக்கும் குப்பை மக்காத குப்பை தனித்தனியாக பிரிக்கப்படுகிறது.

பொதுமக்கள் வீடுகளில் குப்பை வழங்கும் போது மக்கும் குப்பை மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

தெரு, சாலைகள் கால்வாயில் குப்பைகளை கொட்ட கூடாது.இதனை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை சத்துவாச்சாரி 2-வது மண்டல அலுவலகத்தில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 27-வது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 300 பேருக்கு இலவசமாக குப்பைத்தொட்டிகள் வழங்கப்பட்டன. இரண்டாவது மண்டல சுகாதார அலுவலர் லூர்துசாமி மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இதில் கலந்து கொண்டனர். பச்சை நிற தொட்டியில் உணவு காய்கறி பழங்கள் இலைகள் சமையல் கழிவுகள் உள்ளிட்ட மக்கும் குப்பைகளை சேகரியுங்கள்.

நீல நிற தொட்டியில் பிளாஸ்டிக் கேரி பேக் பாட்டில் கவர் டம்ளர் உள்ளிட்ட பிளாஸ்டிக் கழிவுகளை மட்டும் சேகரியுங்கள். இதனை வீடு தேடி வரும் தூய்மை பணியாளர்களிடம் ஒப்படையுங்கள்.

குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதால் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவது எளிமையாக இருக்கும் என மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News