குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு.
குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் 15-ந் தேதி சிரசு ஊர்வலம்
- நாளை தேரோட்டம் நடக்கிறது
- கூடுதலாக 15 சிறப்பு பஸ் கள் இயக்கப்பட உள்ளது
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்திபெற்ற திருவிழாவான, குடியாத்தம் கெங்கையம்மன் சிரசுத்திரு விழா தொடங்கி நடந்து வருகிறது.
திரளாக பங்கேற்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் தரப்பில் உள்ளூர் விடு முறை அளிக்கப்பட்டுள்ளது.
திருவிழாவில் தேரோட்டம் நாளை காலை 8 மணிக்கு நடக்கிறது. திங்கட்கிழமை (15-ந் தேதி) அதிகாலை சிரசு ஊர்வலம் நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த திரு விழாவுக்கு பக்தர்கள் சிரமமின்றி சென்று வரும் வகையில், வேலூர் மண் டல அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டுள்ளது.
அதன்படி, வேலூர் - குடியாத்தம் வழித்தடத்தில் வழக்கமாக இயக்கப்படும் 30 பஸ்களை தவிர்த்து, கூடுதலாக 15 சிறப்பு பஸ் கள் இயக்கப்பட உள்ளது. இதேபோன்று, ஆம்பூர் - குடியாத்தம், பேரணாம் பட்டு - குடியாத்தம் வழித் தடத்தில் தலா 5 சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.
மேலும், பக்தர்கள் எண் ணிக்கை அதிகமாக இருக் கும் நேரங்களில், அதற்கு ஏற்றவகையில் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.