வேலூரில் ஈஷா யோகா மையம் சார்பில் சிவராத்திரி விழா நடந்த காட்சி.
வேலூரில் ஈஷா யோகா மையம் சார்பில் சிவராத்திரி விழா
- இரவு 12 மணிக்கு கூட்டு தியானம் நடந்தது
- 3 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
வேலூர்:
வேலூரில் ஈஷா யோக மையம் சார்பில் சிவராத்திரி விழா நடந்தது.வேலூர் ராணி மகாலில் நேற்று மாலை நடந்த சிவராத்திரி விழாவை ஸ்ரீபுரம் இயக்குனர் சுரேஷ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
ஆப்கா இயக்குனர் சந்திரசேகரன் அன்னதான நிகழ்ச்சி தொடங்கி வைத்தார்.
விழாவிற்கு வந்த பொது மக்களுக்கு இலவசமாக ருத்ர தீட்சை வழங்கப்பட்டது.
இரவு முழுவதும் கோவை ஈஷா மையத்தில் நடந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. 3 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் சிவலிங்கத்திற்கும், லிங்கபைரவிக்கும் பொதுமக்கள் மலர்களை சமர்பித்து வணங்கினர். இரவு 12 மணிக்கு கூட்டு தியானம் நடந்தது.
இதற்கான ஏற்பாடுகளை ஈஷா யோக மைய வேலூர் ஒருங்கிணைப்பாளர் வெங்கடசுப்பு, தன்னார்வலர்கள் மணிவண்ணன், சரவணன், சதீஷ், விஜயகுமார், குணசீலன் ஆகியோர் செய்திருந்தனர்.