உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவர் மீது தண்ணீரை ஊற்றிய போலீசார்.

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி

Published On 2023-05-22 10:52 GMT   |   Update On 2023-05-22 10:52 GMT
  • மனைவி, மகனை கண்டுபிடித்து தரக்கோரிக்கை
  • நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார்

வேலூர்:

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் குறை தீர்வு கூட்டம் இன்று நடந்தது.

மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர்.

பேரணாம்பட்டு அடுத்த கோட்டையூர் கிராமத்தை சேர்ந்த ராஜீவ் காந்தி என்பவர் மனு அளிக்க வந்திருந்தார். அவர் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். மேலும் அவர் மீது தண்ணீரை ஊற்றி முதலுதவி அளித்தனர். வாலிபர் தீ குளிக்க முயன்ற சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து ராஜீவ் காந்தி கூறுகையில்:-

எனது மனைவி சகுந்தலா (வயது 32 ), மகன் புகழ் ஆகியோர் கடந்த ஆண்டு காணாமல் போய்விட்டனர். அவர்களை மீட்டு தரக்கோரி பேரணாம்பட்டு போலீசில் புகார் அளித்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றேன் என கூறினார். இதனையடுத்து அவரை மாவட்ட வருவாய் அலுவலரிடம் அழைத்து சென்றனர். அவர் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News