உள்ளூர் செய்திகள்

குடிநீர் கேட்டு சாலை மறியல்

Published On 2023-03-26 14:18 IST   |   Update On 2023-03-26 14:18:00 IST
  • போக்குவரத்து பாதிப்பு
  • அதிகாரிகள் பேச்சுவார்த்தை

குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம்சீவூர் ஊராட்சி உள்ளது. இந்த சீவூர் ஊராட்சியின் வார்டான கள்ளூர் அடுத்த குறிஞ்சிநகர், முல்லைநகர், ராயல்நகர், பாபாநகர் உள்ளிட்ட பகுதிகளில் சரியானபடி குடிநீர் விநியோகம் இல்லை.

கழிவுநீர் சரியாக செல்லாமல் தேங்கிருப்பதாகவும், கழிவுநீர் கால்வாய்களை தூர் எடுக்க வலியுறுத்தியும், மழைக்காலங்களில் கழிவுநீர் வீடுகளில் புகுவதை தடுக்க வலியுறுத்தியும், ஊராட்சி மன்ற தலைவரிடம் பொதுமக்கள் குறைகளை கூறினால் அலட்சியப்ப டுத்துவதாகவும் அதனை கண்டித்து நேற்று காலையில் அப்பகுதி பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் திடீரென குடியாத்தம்-பலமநேர் சாலையில் கள்ளூர் பஸ் நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர். இதனால் இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், தாசில்தார் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.கார்த்திகேயன், ஆர்.திருமலை, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சப் இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், யுவராஜ், ஒன்றிய குழு உறுப்பினர்கள் தீபிகாபரத், அமுதாலிங்கம், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அஜீஸ், வார்டு உறுப்பினர் ஷாஹிதா அல்தாப் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News