உள்ளூர் செய்திகள்

காட்பாடி காந்தி நகரில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பையை பறிமுதல் செய்த மாநகராட்சி ஊழியர்கள்.

பிளாஸ்டிக் பை பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம்

Published On 2022-07-27 16:28 IST   |   Update On 2022-07-27 16:28:00 IST
  • திடீரென ஆய்வு செய்தனர்
  • ரூ.5 ஆயிரம் வசூல்

வேலூர்:

காட்பாடி காந்தி நகரில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவதாக வேலூர் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

அவரது உத்தரவின் பேரில் மண்டல சுகாதார அலுவலர் சிவகுமார் மற்றும் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் காட்பாடி காந்தி நகரில் உள்ள கடைகளில் இன்று காலை திடீரென ஆய்வு செய்தனர்.

அப்போது 5 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பிளாஸ்டிக் பயன்படுத்திய 5 கடைகளுக்கும் தலா ரூ.200 வீதம் அபராதம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து பிளாஸ்டிக் பை பயன்படுத்தினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News