உள்ளூர் செய்திகள்

தேசிய கைத்தறி தின விழா

Published On 2023-08-08 15:10 IST   |   Update On 2023-08-08 15:10:00 IST
  • மருத்துவ முகாம் நடைபெற்றது
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

குடியாத்தம்:

தமிழ்நாடு அரசு கைத்தறித்துறை வேலூர் சரகம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை இணைந்து 9-வது தேசிய கைத்தறி தினவிழா மற்றும் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குடியாத்தம் கங்காதரசுவாமி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மருத்துவ முகாம் ஆகியவை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வேலூர் சரக கைத்தறி ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.

நகர மன்ற உறுப்பினர்கள் ஜி.எஸ்.அரசு, என்.கோவிந்தராஜ், எம்.ஏகாம்பரம், நவீன்சங்கர், சி.என்.பாபு, மாவட்ட நெசவாளர் அணி தலைவர் எம்.எஸ். அமர்நாத், மாவட்ட துணை அமைப்பாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கைத்தறி ஆய்வாளர் ஷாநவாஸ் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டு கைத்தறி நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர்.

முடிவில் கணபதி நெசவாளர் கூட்டுறவு சங்க மேலாளர் ஜீவானந்தம் நன்றி கூறினார்.

Tags:    

Similar News