உள்ளூர் செய்திகள்
புஷ்ப பல்லக்கு செல்லும் பாதையில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
- சுத்தமாக வைத்திருக்க வேண்டும்
- இன்று இரவு ஊர்வலம் நடக்கிறது
வேலூர்:
வேலூரில் இன்று இரவு புஷ்ப பல்லக்கு ஊர்வலம் நடைபெறுகிறது.
ஊர்வலம் நடைபெறும் லாங்கு பஜார், மெயின் பஜார், கமிசரி பஜார், அண்ணா கலையரங்கம், அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் வேலூர் மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி, ஆய்வு செய்தார்.
மேலும் புஷ்ப பல்லக்கு செல்லும் பாதையில் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என மாநகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.