உள்ளூர் செய்திகள்

குடியாத்தத்தில் வருவாய்த் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள்.

சுதந்திர தினத்தன்று மது விற்பனை

Published On 2022-08-16 09:10 GMT   |   Update On 2022-08-16 09:10 GMT
  • வருவாய்த்துறையினர் சோதனை
  • 145 மது பாட்டில்கள் பறிமுதல்

குடியாத்தம்:

குடியாத்தம் நேதாஜி பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. அதனை ஒட்டிய படி பாரும் உள்ளது சுதந்திர தினத்தன்று அரசு உத்தரவை மீறி அந்த பாரில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் தொடர்ந்து மது பாட்டில்கள் விற்பனை நடைபெற்றது. அப்பகுதி பொதுமக்கள் வருவாய்த்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன் தலைமையில் தாசில்தார் விஜயகுமார், துணை தாசில்தார் சுபிசந்தர் உள்ளிட்ட வருவாய் துறையினர் திடீரென அப்பகுதியில் மதுக்கடை ஒட்டியபடி உள்ள பாரில் சோதனையிட்டனர்.

அப்போது மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து வருவாய்த்துறையினர் அங்கிருந்து 145 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அங்கிருந்த ஊழியர்களை மது பாட்டில்களையும் மேல் நடவடிக்கையாக குடியாத்தம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News