உள்ளூர் செய்திகள்

கால்வாைய காணோம் புகார் தொடர்பாக விசாரணை

Published On 2022-11-22 13:52 IST   |   Update On 2022-11-22 13:52:00 IST
  • குறைதீர்வு கூட்டத்தில் புகார்
  • முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என அதிகாரிகள் தகவல்

வேலூர்:

நடிகர் வடிவேலு நடித்த சினிமா ஒன்றில் கிணற்றை காணோம் என்ற நகைச்சுவை காட்சி இடம் பெரும். தோண்டாத கிணற்றுக்கு ரசீது பெற்றுக் கொண்டு வடிவேலு போலீஸ் நிலையத்தில் புகார் செய்து விட்டு போலீசாரை கிணறு தொண்டப்பட்டதாக கூறப்படும் இடத்திற்கு அழைத்து சென்று கூச்சலிடுவார்.

இதே போல காட்பாடியில் கால்வாயை காணவில்லை என்று கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர்வு கூட்டத்தில் துரை என்பவர் புகார் மனு அளித்தார்.

வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலம் காட்பாடி கல் புதூர் ராஜீவ் காந்தி நகர் 3-வது மெயின் ரோட்டில் வசித்து வருகிறோம். இங்குகழிவு நீர் கால்வாய் கட்டித்தர வேண்டும் என்று 10 ஆண்டுகளாக மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை.

2019-ம் ஆண்டு கால்வாய் கட்டுவதற்கு ஒப்பந்த பள்ளி கோரப்பட்டது விரைவில் பணிகள் தொடங்கும் என்று மாநகராட்சி மூலமாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் பணிகள் தொடங்கவில்லை.அதே நேரம் எங்கள் பகுதியில் கால்வாய் கட்டப்பட்டு இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்டறிந்தோம். அதில் பதில் அளித்துள்ள அதிகாரிகள் 2019-ம் ஆண்டு அக்டோபர் 17-ந் தேதி ரூ.9 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் ஒப்பந்த பள்ளி கோரப்பட்டது.

தொடர்ந்து 2022 -ம் ஆண்டு ஜனவரி மாதம் கால்வாய் பணிகள் முடிவடைந்து விட்டது என தெரிவிக்கப்பட்டது.இதனை பார்த்ததும் நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். இந்த விவரங்களின்படி எங்கள் பகுதியில் கட்டப்பட்ட கால்வாய் காணாமல் போய்விட்டதாகத்தான் கருத வேண்டி உள்ளது. இதில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்‌.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

கட்டாத கால்வாய்க்கு கணக்கு காட்டி அதிகா ரிகள் பணத்தை சுருட்டி கொண்ட தாக மாநகராட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் அசோக் குமார் விசாரணை நடத்தி வருகிறார். அவர் கூறுகையில் பக்கத்து தெருவில் நடந்த கால்வாய் பணியை இந்த தெருவில் நடந்துள்ளது என பதிலாக அளித்துள்ளனர். தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

காட்பாடியில் கால்வாயை காணோம் என கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதில் அளித்த மாநகராட்சி பொதுத் தகவல் அலுவலர் மற்றும் நகர் நல அலுவலர் கண்ணன் கூறியதாவது:-

காட்பாடி கல் புதூர் ராஜீவ் காந்தி நகரில் உள்ள 1,2,3-வது தெருக்களில் கால்வாய் பணிக்காக டெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்தது. ஒதுக்கப்பட்ட ரூ.9.90 லட்சத்தில் 1-வது தெருவில் மட்டுமே கால்வாய் பணிகள் செய்ய முடிந்தது. அதனை நாங்கள் பதிலாக அளித்தோம்.

ஆனால் 3-வது தெருவில் கால்வாயை காணவில்லை என புகார் தெரிவித்துள்ளனர்.

அங்கு கால்வாய் பணிகள் நடக்கவில்லை.அந்த தெருவில் கால்வாய் அமைக்க ரூ.50 லட்சம் வரை செலவாகும். ஒதுக்கப்பட்ட நிதி யில் 1-வது தெருவில் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. முறைகேடு எதுவும் நடைபெறவில்லை. சந்தேகம் இருந்தால் ஆணையத்தில் புகார் தெரிவிக்கிலாம்‌. அதிகாரிகளை பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் எந்த விதமான ஒளிவு மறைவு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News